இன்றும் எனைத் தொடர்கிறான்...
வேலைக்குச் செல்லும் போது,
தெருமுனைக் கம்பத்தின் அருகே..
ஹோட்டலில் நேரெதிர் மேசையில்,
இரவுக்காட்சியின் போது பின்னிருக்கையில்,
குளிக்கையிலே முதுகுத்தண்டில்
வழிவது நீராகத்தான் இருக்கவேண்டும்..
பென்சிலைக் கூராக்கத் தரையினில்
தேய்ப்பதாய் உணர்வது அவனால்தான்..
பார்வைகள் கேள்விகளாய்ச்
சங்கிலி போட்டுத் தொடர்கின்றன..
இழுத்துப் பிடித்த நைலான் கயிறாக
எப்போதும் எனை இறுக்கத் தயங்கவில்லை..
ஓரிரவு வெட்ட முற்பட்டேன்..
சங்கிலித் தொடரை இயக்கிய நரம்புகள்
பிளவுண்டு குபுகுபுவென வெளிவந்த இரத்தம்,
கொதித்துப் போய்த்தான் இருந்தது..
இன்றும் எனைத் தொடர்கிறான்...
Saturday, October 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
லக்கானோ புரந்தரதாசரோ பெரியாரோ
ReplyDeleteஇந்திய அரசியல் சட்டமோ விளக்குபவனிடம்
தொலைபேசி டயலின் எண்கள்
தனித்தெழும்பி விரலருகே நெருங்கும்
கவிதையின்
நடைபாதையில்
காத்துக்கிடக்கிறது ....
வந்தியத்தேவனை குந்தவை
மரணத்தின் உச்ச இலக்குகளில்
அசைகின்ற பாறையின்
சமிக்ஞை அதன் நோட்டம்
கனவு பனித் திரள்களாக
கவிந்த வெண்மலைகள் கவர்ச்சியானவை
மொத்தமா என்னைக் கொல்ல ஒரு கூட்டம் கிளம்பிருச்சு போல.. :P அய்யா எழுதினது தப்புன்னா சொல்லிருங்க.. மாத்திக்கலாம்.. அதுக்காக, இப்டி போட்டுத்தாக்குதல், குண்டர் சட்டத்துலதான் போட வேண்டியிருக்கும்.. :P ஒரு வேலை தொடரும்னு போட்டதால நீங்க தொடர்ந்து எழுதிட்டீங்களோ?
ReplyDeletehttp://www.kalachuvadu.com/issue-118/page46.asp
நீங்க காலச்சுவடு படிக்கிறீங்கங்கறது எங்களுக்குத் தெரியுது.. அதை இங்கயும் வந்து சொல்லணுமா? :P இல்ல ஒரு கடுப்புல இப்டியா?