"அதென்னண்ணே கட்டுடைத்தல்? எதாச்சும் வீட்டப்பத்தி பேசுறீங்களோ?"
"அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.. வீடடைதல், வீடுபேறு இன்னபிற.."
"ஒகோ.. எப்டிண்ணே உடைப்பீங்க? கடப்பாறை எதாச்சும் வேணுமா?"
"தெளிதலும் விலகலுமே போதும்.."
"ஐயோ அப்போ நடுரோட்டுலதானா? ஆமா எதை எல்லாம் உடைக்கலாம்னு சொல்றீங்க?"
"பெருமை, சிறுமை, அச்சம், வெறுப்பு, சீற்றம், கொள்கைகள் போன்றவை வளரும்போது வருவன.. வளரும்போதே மாறுவன.. மாற்றத்தையும் கட்டிப்போடும்போது உடைக்கத்தான் வேண்டியதாகிறது.. ஏன் தொக்கி நிற்
கும் இந்தப் பத்தியைக்கூட உடைத்திடலாம்.. முயன்றால்.."
"மூச்சு வாங்குதுப்பா.. இதெல்லாம் கட்டுமான சாமான் இல்லியே? இதை எல்லாம் எப்டி உடைக்கிறது?"
"விழிப்புணர்வு, தேடல், அறிதல், புரிதல் என்று பரிமாணங்கள் உள்ளன.."
"இதெல்லாம் எங்க govt. வியாதிக்கு மட்டும்தான் சொல்றாங்க.. நீங்க என்னடானா இப்டி சொல்றீங்க? ஆமா இப்போ தான் ஞாபகம் வருது.. இந்த மாதிரி ஒருத்தர் சுத்திட்டுருந்தாரு.. ஆனா அவருக்கும் சிலை ஒன்னக்கட்டி உடச்சுகாட்டிட்டோம்ல? :P"
"...."
"அப்றோம் இது எப்டி இந்த ஒரு சமூக அக்கறை வந்துச்சு உங்களுக்கு? தனியா பண்றீங்களா? இல்லாட்டி ஒரு group ஆவா?"
"தனித்துச்செயல்படும் தன்னார்வ நிறுவனமாக உள்ளோம்.."
"அடுத்தவன் கட்டுறத உடைக்கிரதுல என்ன ஒரு ஆர்வம் உங்களுக்கு? இவ்ளோ கஷ்டப்பட்டு உடைக்கிறீங்களே? எதாச்சும் காசு கீசு?......."
".................."
Friday, October 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteகாசு கீசு எதுவும் கிடையாது. பெரிய மனிதர்கள் நாங்கள் செய்வதைப் புரிந்து விவாதிப்பாங்க. அதுவே ஒரு பரிசு தானே.
ReplyDeleteபெரிய ஆள் தான்னே நீங்க !! அப்படி என்னதான் சமாசாரம் ? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் ?
சுருக்கமா , "உங்களுக்கு" புரியுற மாதிரி சொல்றேனே. அதாவது , நீங்க பேசுற - அல்லது உறைக்கும்னு வச்சுப்போமே - ஒரு வாக்கியத்த மேலோட்டமா பார்த்தா ஒரு அர்த்தம் தான் இருக்கும் .ஆனா அந்த வாக்கியத்த பல கோணங்களில் ஆராஞ்சா பல பரிமாணங்கள் கிடைக்குது.அதற்கு உங்களுடைய பிறப்பு , மொழி , வளர்ப்பு , எல்லாமே காரணமாயிருக்கு.இது போல எல்லா விஷயங்களையும் ஆராயலாம். எவ்வளவு ஆராய்ந்தாலும் இன்னும் கொஞ்சம் ஆராயப்படாமல் விட்டுப் போயிருக்கும். இப்படித் தொடங்கி யோசிச்சுகிட்டே போகலாம்.
அட நம்ம வேப்பமரத்து சாமியார் மேட்டரு!!! கம்முனு அவரு கூட சேந்துடுன்னே நல்ல துட்டு பாக்கலாம்!!!
( கதர் ஜிப்பாவின் தொனி சட்டென்று மாறுகிறது ) அட போங்கண்ணே.அதே மேட்டர் தான் !!! இருந்தாலும் இப்ப தான் வெள்ளக்காரன் இத சொல்லிருக்கான். அதனால இப்போ இதுக்குதான் நல்ல கிராக்கி. நாலு வார்த்த வெள்ளக்காரன் மாதிரியே பேசுனாதானே மரியாத . இந்த தொழில்ல காசு எதுவும் பாக்கமுடியாது . ஆனா ஓசில பீர் கெடைக்கும். ராத்திரி பூரா குடிச்சுகிட்டே கட்டுடைத்தல் கட்டடம் கட்டுதல்னு பேசலாம். கேக்கறவனுக்கும் புரியாது நமக்கும் புரியாது. அதுவுமில்லாமே சாமியார் ஆகுறதுக்கு தாடியெல்லாம் வளர்க்கணும். ரொம்ப அரிக்கும். இதுக்கு கதர் ஜிப்பா போட்டா போதும்.என்ன , வேர்த்தா கொஞ்சம் அக்குள்ள ஈரமாகி கசகசன்னு இருக்கும். தொழில்னு வந்த அதெல்லாம் பார்க்க முடியுமான்னே ?
சாமியாராகி மடமெல்லாம் வச்சா நல்லா காசு பக்கலாமேப்பா ?
அது, பெரிய ஆளான இதுலயும் நல்ல காசு உண்டுண்ணே!!! இந்த இங்கிலிஷு பேப்பர்ல எல்லாம் இப்போ புரியாத மாதிரி எழுதுறதுக்கு நல்ல கிராக்கி.அது போக இந்த கண்ணாடி விளம்பரம் பேனா விளம்பரத்துல எல்லாம் நடிக்குறதுக்கு நல்ல காசு. (பெருமூச்சு விட்டவாறே ) அதெல்லாம் ரொம்ப தூரம் நே...
அப்பா உலகமே இப்படி தானா ?
இப்போ இந்த வாக்கியத்துல, உலகம் என்பது எதைக் குறிக்குது ? மனிதர்களாகிய நம்முடிய வாழ்வியல் தளத்தையும் அதில் மனிதர்களுடைய இடையூறு மற்றும் இடயூரின்மையால் உருவாகியிருக்குற சூழலையும் குறிக்குது. இந்த அர்த்தம் உடைய உலகம் அப்படீன்ற குறியீட்டுல....
ஐயோ!!!! ஆள விடுப்பா ...(லுங்கி பார்ட்டி தெறித்து ஓடுகிறார் )
( மாயவரம் பஸ் ஸ்டாண்டில் ஜிப்பா ஒருவரும் லுங்கி அணிந்த ஒருவரும் )
நட்சத்திர குறியிட்ட "டயலாக்" ஒவ்வொன்றுக்கும் ரூ.250 பரிசு.
வாசகர்கள் இது போன்ற டயலாக்குகளை நக்கீரன் முகவரிக்கு அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப் படும் டயலாக்குகளுக்கு பரிசு உண்டு.
:)
ReplyDeleteதொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் வாசகர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம்.. பிரசுரிக்கப்படும் அனைத்து உரையாடல்களும் பரிசுக்கு உரியவையே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.. பரிசு என்னவென்பதை வரும் வாரங்களில் தெரிவிக்கிறோம்..