Sunday, June 6, 2010

விடாது கருப்பு!

கூட்டத்திலே கருப்பு ஆட்டைத் தேடுவது
காவு கொடுக்கவோ?

அவன் காகத்திலோ, எருமையிலோ
ஏறி வருவதாக எனக்குத் தெரியவில்லை..
நடந்தேதான் வந்தான்..

ஈமக்கிரியைத் தாளில்,
பதவி அடைவது,
மங்களகர மஞ்சளில் வருவதில்லையே?















பெரியாரியத்தில் ஊறியவனோ?
கையில் கருப்புக் கயிறு..

சபரிமலை சாமியோ?
அசைவ பந்தியில் எலும்பைக் கழுவியபடி இருந்தான்..

"யாரடா நீ?" எனக் கேட்டதற்கு,
"மணப்பெண்ணின் முன்னாள் காதலன்" என்றான்..
பந்தலருகே அணைந்த பந்தத்துடன் இருவரை நிறுத்தினேன்..

Pic: FreeFoto

2 comments:

  1. "அசைவ பந்தியில் எலும்பைக் கழுவியபடி இருந்தான்."
    நக்கிடிங்க தம்பி!!

    அப்புறம் அந்த எலும்பு முதல் வரியில் உள்ள ஆட்டோடதா?

    ReplyDelete
  2. Dinesh has left a new comment on your post "விடாது கருப்பு!":

    "அசைவ பந்தியில் எலும்பைக் கழுவியபடி இருந்தான்."
    நக்கிடிங்க தம்பி!!

    அப்புறம் அந்த எலும்பு முதல் வரியில் உள்ள ஆட்டோடதா?

    >>

    அப்படி இருக்கணும்னு அவசியமில்ல.. :) இருந்தாலும் உனக்கு என்ன தோணுதோ அப்படியே எடுத்துக்கலாம்..

    ReplyDelete