Wednesday, June 23, 2010

"அதே கரையில், உன்னுடன் கரைகையில்.."

உறவாடிச் சென்ற பறவையொன்றைப்
பிரதியெடுத்துக் காத்திருக்கும்..

ஊழிக்காற்றின் பேரலைகள்,
உனைத் தொடத் துடித்திருக்கும்..













இருந்தும், கடந்த வருடம் பதிந்த தடம்,
அழியாமல் வைத்திருக்கும்..

பிஞ்சுக் கால்களை எதிர்பாராமல்,
மலர்களைக் கொணர மறந்திருக்கும்..

சாரல் நனைத்த உடல் முழுதும்
உலர்ந்து போகலாம்..
ஒன்றிணைந்த நம்முள்ளம் என்றும்
நனைந்தேயிருக்கும்..

5 comments:

  1. nakkal rascal!!!
    akka nu tag pottu.. romantic couple photo pottirukkey!!! edhaachchum onna thooku!!

    ReplyDelete
  2. ஒரு சிறிய விளக்கம்:

    இது கணவன், மனைவியோடு கடற்கரை சென்று, அவளைப் பார்த்தும் கடலை மையமாகக் கொண்டும் பேசுவதாக எழுதினேன்..

    //
    உறவாடிச் சென்ற பறவையொன்றைப்
    பிரதியெடுத்துக் காத்திருக்கும்..
    //

    நீர்ப்படுகை, தன்மேல் என்றோ பறந்த பறவையொன்றின் பிம்பத்தின் பிரதிபலிப்பைச் சேமித்து, இந்நாள் வரும் தன் மனைவி காண்பதற்காகக் காத்திருப்பதாய்ச் சொல்கிறான்..

    //
    பிஞ்சுக் கால்களை எதிர்பாராமல்,
    மலர்களைக் கொணர மறந்திருக்கும்..
    //

    சென்ற வருடம்போல் அல்லாமல், இவ்வருடம் தன் குழந்தையையும் அழைத்துச்சென்றதால், கடல் எதிர்பாராததாய்க் கூறுகிறான்..

    ReplyDelete
  3. Super senthil....
    especially,
    "உறவாடிச் சென்ற பறவையொன்றைப்
    பிரதியெடுத்துக் காத்திருக்கும்"...
    Expecting some updates from u everyday...

    ReplyDelete