இலக்கற்றுத் திரிவதுதான் இயற்கையாம்..
திரிந்தாலும் நினைவுறுத்தத் துடிக்கிறது,
காலணியில் நெருடும் சிறுகல்..
தாத்தாப்பூச்சிகள்,
பொறாமை தூண்டுபவையாவே இருந்திருக்கின்றன..
சோப்புநுரைகளைப் போல
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
தொடர்ந்து சென்று இரண்டின் முடிவுகளையும்
பார்த்திராத நாட்களில்,
இலக்குகளை உணர்ந்ததில்லை..
அடர்த்தியும் மென்மையும் கொண்ட
அழகிய முரணாய்,
வெளியெங்கும் மிதப்பது
அசூயை கொள்ளத்தூண்டும்..
இறுதியில் அடையுமிடம்,
பிஞ்சுக் கைகளோ
முள்வேலிகளோ..
செடியாக வளர்ந்து பூப்பது,
எல்லாம் வல்ல இயற்கையிடத்து..
அம்புகளுக்கு இலக்குகளில்லை..
எய்தவனுக்கே..
Saturday, June 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
:) நன்று. அருமை. புரிந்து கொள்ளும் படியாக எழுதியதற்கு. :P
ReplyDeleteஅம்புகளுக்கு இலக்குகள் இல்லை. எய்தவனுக்கே.. - நீ அம்பாக இருக்கிறாயா அல்லது தாத்தப் பூச்சிகளைக் கண்டு ஏக்கமா?
ஏக்கமல்ல.. அம்புதான்.. தலைப்பப் பாருங்கப்பா.. ;)
ReplyDelete