சிங்கங்கள் கூட்டமாக இருப்பது கொடுமைதான்..
மாட்டைத் தின்றதைச் செரித்துக்கொண்டிருந்தன சில..
வாரங்களாய் உண்ணாதவையும் இருக்கத்தான் செய்தன..
இழுத்து வந்த மான்களைக் கண்ட வேளை,
வரும் ஏப்பத்தை எரித்துவிட்டு,
தனக்கான பங்கை வேறெவனும்
கைபடாமல் எடுத்துச் சென்றாயிற்று.
Subscribe to:
Post Comments (Atom)
ஏன்பா இந்த மேலாண்மை அப்படின்றது light ஆ புரியுது . புதுசா பேராண்மை அப்படின்னு ஒரு படம் வந்திருக்கே அதுக்கு என்ன அர்த்தம் ?
ReplyDeleteஅது போக இந்த பெண்ணிய வாதிகல்லாம் இதை மேல்மனிதமை அப்படின்னு வைக்க சொல்றது இல்லையா ?
இது வெறும் 'ஆளுமை'க்கும் 'ஆண்மை'க்கும் வேறுபாடு அறியாததால் வரும் குழப்பம்.. 'மேலாளுமை'ன்னு எழுதலாம்.. ஆனால், 'மேலாளுமை'க்கு தற்போது கற்பிக்கப்படும் பொருள் 'ஆதிக்கம் செலுத்துவது' ஆகும்.. இதில் முரண்நகை என்னவென்றால் '"man"agement' என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாகத்தான் 'மேலாண்மை/மேலாளுமை' எடுத்தாளப்படுகிறது.. தங்களது குழப்பத்தை எடுத்துச் சென்றால் '"human"agement' என்று மாற்றவேண்டும்.. :) யாரோ ஒருத்த'ர்' இப்படி இலக்கணத்தின் புணர்ச்சி விதிகளைக் (இருந்ததோ/புகுத்தப்பட்டதோ/தவறோ) கொண்டு 'ஆண்மை'ன்னு எழுதிட்டா'ர்'.. அதனால இப்போ ஆணாதிக்கக் கூறுகளை ஏற்றுக்கொள்ளுமளவு வந்த தமிழ் ஒரு ஆணாதிக்கமொழின்னு சொல்லிடலாமா? :)
ReplyDeleteஇதனால் 'மேல்மனிதமை' எனக்குச் சரியெனத் தோன்றவில்லை.. என்ன காரணம்? 'மனிதன்' இன் எதிர்ப்பதம் மனுஷி.. இது என்ன சொல்? 'மனு'வின் முறைகளைக் கொண்டு 'வாழ்'வதால் '"மனு"ஷி'/"'மனி"தன்' ஆ? இது எதுவரை செல்கிறது? உடன்கட்டை/அகமண முறை.. ம்ஹூம்.. இது முடிவில்லாதது.. இதுக்குத்தான்யா simple ஆ ஆண்/பெண் நு முடிச்சுடுறது.. இங்க அது தப்பாபோச்சு.. ஆளுமைன்னு வச்சுக்கலாம்.. அதுலயும் பிரச்னை இருக்குது.. பாப்போம்..
இந்த கோணத்தில்(வச்சுக்குவோம்) பார்த்தால், ஆளுமையை ஆண்மையுடன் இணைக்க என்ன காரணம்? அப்படி 'ஆளுமை' ஆணவர்க்கத்துக்குத்தான் என்றால், 'ஆளுநர்', 'ஆட்சி', 'ஆண்டவன்'(முகமதியரும் கிறித்தவரும் ஆண்டவ'ர்' என்றே அழைக்கின்றனர், 'அவர்' ஆணாகவே இருந்தாலும்.. மரியாதை நிமித்தமே..) என்ற சொற்களின் அரசியல் என்ன? 'ஆண்டாள்' பாத்திரம் எதைக் குறிக்கிறது?
அப்புறம், நான் 'ராம் சேனா' member இல்லைங்கறதையும் தெளிவா சொல்லிடுறன்.. எதுவும் அனுப்பிட வேண்டாம்.. ;P தலைப்பை இப்போவே மாத்தியாச்சு.. வுட்டா 'வேளாண்மை' க்கும் இப்படி ஒரு எதிர்ப்பு குடுப்பீங்க போல?? :P
'அறியாத'ங்கற வார்த்தை சும்மா தான்.. உங்களை எல்லாம் அறியாதன்னு சொல்ல முடியுங்களா? ;P
ReplyDelete'மேலாளுமை' இங்க சரியாவே வரும்னு தோணுது.. :P
ReplyDeleteமிக்க நன்றி பழமைபேசி ஐயா, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்..
ReplyDelete