Monday, November 23, 2009

'தனித்து'வம் (மையச் சிந்தனைகள் - 4)

நண்பகலில் நிழலைக் கண்டான்..
முகம், உடல் என அனைத்தும் அவனுடையதே..
தன்னையோ நிழலையோ வேறுருவம்
தீண்டலை வெறுத்தான்..

தெருக்களில் நடக்கையில்,
மரம், மாடு, மக்கள்..
இவற்றின் நிழலும் தன்னிழலில் விழாதவாறு,
தாவிக் குதித்தபடி நடந்தான்..
நடந்து கொண்டே இருந்தான்..

நின்ற இடம் ஒரு பாலை..
உள்ள வேட்கை தணிந்தது..
கதிரவன் கரைந்து கொண்டிருந்த வேளை,
புதைமணலில் நீண்டு கரையத் தொடங்கியிருந்தது,
நிழலுடன் நிஜமும்..

2 comments:

  1. அட... நிழலோட நெசமும் போயே போச்சா? நன்று!

    ReplyDelete
  2. :) ஆமாங்கண்ணா.. அவனளவில் நிழலே முக்கியம்.. நிழல் போனப்புறம் நிஜமும் போய்டுச்சு.. நன்றிங்கண்ணா..

    ReplyDelete