பதுங்கியிருந்த பலவற்றை
வெளிக்கொணர்ந்திருந்தது, மழை..
ஊர் எல்லையின் விளக்கு கண்சிமிட்டியபடி,
வழிப்போக்கரின் கண்களை மழுங்கடித்தது..
இணைதேடும் தவளைகளும்,
இலக்குகளைத் தேடும் ஆந்தைகளும்,
இருப்பை உணர்த்தும் மின்மினிக்களும்,
ஒன்றையொன்று கவனியாதே இருந்தன..
சற்றே ஈரமடைந்த
பூமியின் இரேகைகளாகக்
கிடந்த தெருக்களில்,
பதிந்த தடங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தேன்..
கூரிய நகங்கள், பூனையாக இருக்கக்கூடும்..
நரியாகவும் இருக்கலாம்..
இருப்பினும், இரத்தக்கறை எதுவும் அருகாமையிலில்லை..
சிறிய பாதத்தோடு மெல்லிய பதிவு,
நாயாக இருக்கலாம்.. தூரத்தில் முனகல் சத்தம்..
மாட்டுக் குளம்புகளின் பதியங்கள்
அங்குமிங்குமாய் தென்பட,
வல்லூறுகளின் நகக்கோடுகளும்,
அவை இழுத்துப் பறந்து சென்ற,
உடலின் சிதைந்த ரேகைகளும்..
வீடு வந்து கதவடைக்கும்போது,
நான் நடந்து வந்ததை திரும்பப் பார்த்தேன்..
கழுதைப்புலி ஒன்றின் பதிவுதான் கண்பட்டது..
ஆம், பதுங்கியிருந்த பலவற்றை
வெளிக்கொணர்ந்திருந்தது, மழை..
Friday, May 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Gr8 one.. Enjoyed it a lot...
ReplyDeleteநன்றிகள் பாலா!
ReplyDeletenice one.. வீடு வந்து கதவடைக்கும்போது,
ReplyDeleteநான் நடந்து வந்ததை திரும்பப் பார்த்தேன்..
கழுதைப்புலி ஒன்றின் பதிவுதான் கண்பட்டது.. idhu purila
<<
ReplyDeleteSubhashini has left a new comment on your post "அகத்தின் அழகு..":
nice one.. வீடு வந்து கதவடைக்கும்போது,
நான் நடந்து வந்ததை திரும்பப் பார்த்தேன்..
கழுதைப்புலி ஒன்றின் பதிவுதான் கண்பட்டது.. idhu purila
>>
For some reason, your comment didn't appear in the blog.. So I copied it from my from Mail account where I received this notification..
வரும்வழியெங்கும் பார்த்து வந்த தடங்களைப் போல இவன் நடந்த வந்த தடம் எப்படி இருக்குமென்று திரும்பிப்பார்க்கிறான்.. கழுதைப்புலியின்(Striped Hyena) தடமாய்த் தெரிகிறது..