Wednesday, May 26, 2010

பாலையில் வேட்டை.. (மையச் சிந்தனைகள் - 5)

புரியாத மொழி பலவுண்டு..
போடாத வேஷம் பலவுண்டு..
உணராத சுவை பலவுண்டு..
உணர்ந்தும் உணரவொண்ணா, நிற்கமாட்டாத இடம் பலவுண்டு..

உள்ளூர அரித்துக்கொல்லும்
எதிர்மறைகள் குவிந்து ஈட்டி எரிய,
பறவையின் நிழலைத் தொடரும் குழந்தையைப் பாவித்து,
இல்லாத பறவையையும்,
இருளில் மறைந்திடும் நிழலையும்,
உணராமலே,
ஓடித்திரிகிறேன்..

4 comments:

  1. தம்பி முதல் பத்திக்கும் இரண்டாம் பத்திக்கும் என்னக தொடர்பு ?
    ஓடி திரிவதற்கு எதற்கு பறவையையும் நிழலையும் உணரனும்?

    ReplyDelete
  2. :)

    முதல் பத்தி, அவனின் மனநிலையைக் கூறுகிறது..

    'உணர்ந்தும் உணரவொண்ணா, நிற்கமாட்டாத இடம் பலவுண்டு..'
    தெரியாத பல இருந்தும், அவை இயற்கையே.. தெரிய வேண்டிய அவசியமில்லை.. தெரிந்த, புரிந்த, உணர்ந்துகொள்ளக் கூடிய நிலைகள் இருந்தும் அவற்றைப் பொறுக்க முடியா இயலாமையை இந்த வரி கூறுவதாக இருக்கிறது..

    இதன் தொடர்ச்சியே இரண்டாவது பத்தி.. இவை ஏன் இப்படி என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஓடும் மனநிலை..

    'பறவையின் நிழலைத் தொடரும் குழந்தையைப் பாவித்து,'
    இது ஒரு உவமை.. பறவை எங்கு செல்லுமோ அங்கெல்லாம் குழந்தை தொடரலாம்.. எதைத் தொடர்கிறோம் என்று அது அறிய வாய்ப்பில்லை.. தொடர்வது நிழலைத்தான் என்றும் தெரிய அவசியமில்லை..

    'உணராமலே,
    ஓடித்திரிகிறேன்.. '
    மேலே சொன்ன அந்தச்செயலில், குழந்தையாவது, நிழலைத் தொடர்கிறது.. இவன் அவை இரண்டும் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு தொடர்கிறான்.. அவை இல்லை என்பதை அறியாமலே அல்லது உணராமலே..

    ReplyDelete
  3. cha.. super senthil..
    so intensive words & content...
    I wish ur works should cross horizons & reach many ppl...

    ReplyDelete
  4. நன்றிகள் பாலா.. இன்னும் அந்தளவுக்கு வரலங்க.. தொடர்ந்து எழுதிப்பாப்போம்.. நீங்களும் தொடர்ந்து எழுதணும்..

    ReplyDelete