விழிகள் சிரிக்கப் பழகின..
உதவிக்காய் ஆரம்பித்து,
தினம் உதை வாங்கி விழி திறந்தேன்,
சிரித்துக்கொண்டே தான்..
சிலாகிப்புகளும் கருத்து மோதல்களும் காற்றளவில்தான்..
இருத்திய நம்பிக்கைகள், ரேகைகளையும் அழித்தன..
நா உலர்ந்தும் போயிருக்கின்றது..
நாளடைவில், கண்ணசைவுகளே போதுமென்றானது..
மொழிதலின் பயனற்றுப் போனதாய்ச் சில
நாட்கள்,
மாதங்கள்..
உலர்ந்த சேலை கம்பியினின்று பறப்பதாய் உணர்ந்தேன்..
உறவுகளுக்குள் விடுதலையென்பது மரணித்தால் மட்டுமே..
மேகங்கள் சற்றே கூடுவதாய்த் தெரிந்தது..
நலவிசாரிப்புகள் செல்லச் சாபங்களில் தொடர்ந்தது..
பீரிட்ட கண்ணீர்,
சேலையைக் கம்பியுடன் இணைத்துச் சென்றது..
Friday, December 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
dei!!! for god's sake dont write such poems!!! affecting!! irritating!!
ReplyDeleteமேகங்கள் சற்றே கூடுவதாய்த் தெரிந்தது..
heights!!! ur life is in ur hands!!! take care!!!!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆகா!! :) அண்ணே, இது ‘affect' செய்யும் என்று தெரியும்.. ஆனால், வாழ்வின் சில முக்கியத் தருணங்களைக் காண/உணர இவை வேண்டும்..
ReplyDeleteஇதன் பொருள் விளங்கியதா? அனுபவங்கள்தான் சிறந்த எழுத்தாக முடியும் என்று சொல்வார்கள்.. அவ்வகையில் இதுவும் ஒர் அனுபவமே!!.. ஆயின், மனம் நிறையும் அனுபவம்.. சிதைவதல்ல..